தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டது + "||" + Yet another low for rupee, now hits 72.18 against US dollar

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆக வர்த்தகம் ஆகிறது.
மும்பை,

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் பதற்றம், நாட்டின் பொருளாதார பிரச்சினை குறித்த அச்சம் ஆகியவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதும் வீழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.72.18 ஆக வர்த்தகம் ஆகிறது. 

அதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணை முட்டும் அளவுக்குத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.91 ஆகவும், டீசல் விலை ரூ.76.98 ஆகவும் விற்பனையாகிறது.