ஒடிசா மகளிர் விடுதி அறையில் இளம்பெண் அருகே படுத்திருந்த நாக பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த தோழி


ஒடிசா மகளிர் விடுதி அறையில் இளம்பெண் அருகே படுத்திருந்த நாக பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த தோழி
x
தினத்தந்தி 10 Sep 2018 8:54 AM GMT (Updated: 10 Sep 2018 8:54 AM GMT)

ஒடிசாவில் மகளிர் விடுதி அறை ஒன்றில் இளம்பெண் அருகே 5 அடி நீள நாக பாம்பு படுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயூர்பாஞ்ச்,

ஒடிசாவின் மயூர்பாஞ்ச் நகரில் பாரிபடா பகுதியில் மகளிர் விடுதி ஒன்று அமைந்துள்ளது.  இங்குள்ள அறை ஒன்றிற்கு தனது தோழியை காண வந்த இளம்பெண் ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தோழியின் அருகே 5 அடி நீள நாக பாம்பு ஒன்று படுத்திருந்துள்ளது.  உடனடியாக தோழியை அங்கிருந்து பாதுகாப்புடன் செல்ல அவர் அறிவுறுத்தினார்.

அதன்பின் அந்த பகுதியில் பாம்பு பிடிக்கும் கிருஷ்ண சந்திரா கோசயாத் என்பவருக்கு விடுதியின் ஊழியர் தகவல் தெரிவித்துள்ளார்.  இதனை அடுத்து மீன் வலை ஒன்றின் உதவியுடன் பாம்பு பிடிக்கப்பட்டு சிம்லிபால் என்ற பகுதியில் விடப்பட்டது.

பொதுவாக நாக பாம்புகள் மனிதர்களை தீண்டுவதில்லை.  அவை தனது பாதுகாப்பிற்காகவும் மற்றும் தூண்டப்பட்டால் மனிதர்களை தாக்க கூடியவை என கூறப்படுகிறது.

வனவாழ் பாதுகாப்பு சட்டம் 1972ன்படி நாக பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பிரிவின் கீழ் வருகிறது.


Next Story