தேசிய செய்திகள்

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 விலை குறைப்பு + "||" + Chandrababu Naidu announces a reduction in petrol and diesel price by Rs 2 each

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 விலை குறைப்பு

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 விலை குறைப்பு
ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,


வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது. 

இதற்கிடையே ராஜஸ்தான் மாநில பா.ஜனதா அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான வாட்வரியை குறைத்தது, இதனால் அங்கு ரூ. 2.5 குறைந்தது. இதற்கிடையே மராட்டிய மாநில அரசும் கவனத்தில் கொள்வதாக தெரிவித்தது. 

இந்நிலையில் தெலுங்குதேசம் ஆட்சிசெய்யும் மாநிலத்தில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா 2 ரூபாய் குறைக்கப்படுகிறது, இது நாளை முதல் அமலுக்கு வரும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 


ஆசிரியரின் தேர்வுகள்...