5 பியூன் வேலைக்கு 23 ஆயிரம் விண்ணப்பம்; சி.ஏ., சட்டம் படித்தவர்களும் போட்டி


5 பியூன் வேலைக்கு 23 ஆயிரம் விண்ணப்பம்; சி.ஏ., சட்டம் படித்தவர்களும் போட்டி
x
தினத்தந்தி 10 Sep 2018 12:40 PM GMT (Updated: 10 Sep 2018 12:40 PM GMT)

5 பியூன் வேலைக்கு சி.ஏ., சட்டம் படித்தவர்கள் உள்பட 23 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.



ஜெய்பூர்,

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2013-ல் பா.ஜனதா 163 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கி ஆட்சியை பெற்றது. அப்போது மாநிலத்தில் 15 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என தெரிவித்தார். 

விரைவில் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அதற்கான பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். 5 நாட்களுக்கு முன்னதாக பேசுகையில் மாநில திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் 16 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 3.23 அரசு வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது, 1.35 லட்சம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த பணிகள் நடக்கிறது. 20 லட்சம் சுயவேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று கூறினார். இந்நிலையில் அங்கிருந்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள 5 பியூன் வேலைக்கு சி.ஏ., சட்டம் படித்தவர்கள் உள்பட 23 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. போட்டியில் 393 முதுநிலை பட்டத்தாரிகள், 23 வழக்கறிஞர்கள், ஒரு சிஏ, 129 என்ஜினியர்களும் இந்த போட்டியில் உள்ளனர். சிஏஜி அறிக்கையின்படி மாநில திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவுதான் என தெரிகிறது. ஆனால் வசுந்தரா ராஜே சிந்தியாவின் கூற்று மாறுப்பட்டதாக இது அங்கு விவாதப்பொருளாகியுள்ளது.

இதற்கிடையே முதுநிலை பட்டம் முடித்துவிட்டு காய்கறி விற்பனை செய்யும் மீனா பேசுகையில், “என்னுடைய பட்டப்படிப்போ, அரசோ வேலை வழங்கப்போவது கிடையாது. இப்போது என்னுடைய தேவைக்காக காய்கறிகளை விற்பனை செய்கிறேன். எங்களுடைய முயற்சியால் நாங்கள் செய்யும் வேலைக்கும் அரசு பாராட்டு வாங்குகிறது. கேட்டால் சுயவேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளோம் என்கிறார்கள்,” என கூறியுள்ளார். 

Next Story