ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேருக்கு தூக்கு சிறப்பு நீதி மன்றம் உத்தரவு


ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு:  2 பேருக்கு தூக்கு சிறப்பு நீதி மன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2018 1:44 PM GMT (Updated: 10 Sep 2018 1:44 PM GMT)

ஐதராபாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி, பிரபல கோகுல் சாட் உணவகம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இதில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும்  திறந்தவெளி திரையரங்கம் அருகே 10 பேரும் என  மொத்தம் 42 பேர் பலியாகினர்.  50 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை போலீசார் கடந்த 2008-ல் கைது செய்தனர். 

இந்த வழக்கு ஐதராபாத் 2-வது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.  கடந்த விசாரணையின் போது  2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. 3 பேரை விடுதலை செய்தது.

இந்தநிலையில் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி ஆகிய 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story