ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட தீவிரவாத செயல், எந்த சமரசமும் செய்துக்கொள்ள கூடாது - காங்கிரஸ்


ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட தீவிரவாத செயல், எந்த சமரசமும் செய்துக்கொள்ள கூடாது - காங்கிரஸ்
x
தினத்தந்தி 10 Sep 2018 1:52 PM GMT (Updated: 10 Sep 2018 1:52 PM GMT)

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட தீவிரவாத செயல், எந்தஒரு சமரசமும் செய்துக்கொள்ள கூடாது என காங்கிரஸ் கூறியுள்ளது.


புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்விவகாரத்தில் 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசியல் கட்சிகளும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தீவிரவாதம், தீவிரவாதிகளுடன் எந்த சமரசமும் செய்துகொள்ள கூடாது என காங்கிரஸ் கூறியுள்ளது. 

புதுடெல்லியில் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலாகும். தீவிரவாதம், தீவிரவாதிகளுடன் எந்த சமரசமும் செய்துகொள்ள கூடாது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், பிறரையும்தானே கொலை செய்தார்கள் என்று நட்பு கட்சியான அதிமுக மற்றும் தன்னுடைய ஆளுநரின் மூலம் பா.ஜனதா, 7 பேரையும் விடுதலை செய்ய போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார் ரந்தீப் சுர்ஜிவாலா. 

Next Story