தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க வீட்டு செலவை குறையுங்கள் - ராஜஸ்தான் மந்திரி அறிவுரையால் சர்ச்சை + "||" + Reduce housing costs to overcome petrol price hike - The controversy by the Rajasthan minister's advice

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க வீட்டு செலவை குறையுங்கள் - ராஜஸ்தான் மந்திரி அறிவுரையால் சர்ச்சை

பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க வீட்டு செலவை குறையுங்கள் - ராஜஸ்தான் மந்திரி அறிவுரையால் சர்ச்சை
பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க வீட்டு செலவை குறையுங்கள் என ராஜஸ்தான் மந்திரி அறிவுரையால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியில் தேவஸ்தான துறை மந்திரியாக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. இவர், பொதுமக்களுக்கு கூறிய அறிவுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது:-

பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதையும் அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

நாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். அதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை, உலக சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை. இவ்வாறு ராஜ்குமார் ரின்வா கூறினார்.

அவரது கருத்து, ஆணவம் நிறைந்தது, மனிதத்தன்மை அற்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை
பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி ரிசர்வ் வங்கி கவர்னருடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
2. பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: பிரதமர் மோடி மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை
பிரதமர் மோடி மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என பா.ஜனதா கூறுவது மிகப் பெரிய நகைச்சுவை! காங்கிரஸ்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். #BharathBandh
4. பெட்ரோல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது - பா.ஜனதா சொல்கிறது
பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியுள்ளது. #BharathBandh #BJP