தேசிய செய்திகள்

மேகதாதுவில் புதிய அணை: இருமாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமர் மோடியிடம் கர்நாடக உயர்மட்ட குழு வலியுறுத்தல் + "||" + New Dam in Meghataduwa: Dikshit to meet first ministers of the state - Prime Minister Modi urged Karnataka High Commission

மேகதாதுவில் புதிய அணை: இருமாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமர் மோடியிடம் கர்நாடக உயர்மட்ட குழு வலியுறுத்தல்

மேகதாதுவில் புதிய அணை: இருமாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமர் மோடியிடம் கர்நாடக உயர்மட்ட குழு வலியுறுத்தல்
மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகம், தமிழ்நாடு முதல்-மந்திரிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக உயர்மட்ட குழுவினர் வலியுறுத்தினர்.
புதுடெல்லி,

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, குடகு உள்பட சில மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவி வழங்க கோரி பிரதமரிடம் மனு கொடுத்தனர்.மேலும், மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்.

புதிய அணை கட்டுவதால் தமிழகத்திற்கு நடுவர் மன்ற உத்தரவுப்படி வழங்க வேண்டிய நீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை 314.40 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தது.
2. தமிழகம் காக்கப்பட வேண்டுமென்றால், மேகதாது அணை கூடாது: தம்பிதுரை
தமிழகம் காக்கப்பட வேண்டுமென்றால், மேகதாது அணை கூடாது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
3. மேகதாது, ரபேல் விவகாரங்களால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம் - இரு அவைகளும் ஒத்திவைப்பு
ரபேல் மற்றும் மேகதாது உள்ளிட்ட விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் நேற்றும் ஒத்திவைக்கப்பட்டன.
4. முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை: “அடிப்படை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் அனுமதி தேவையில்லை” - கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு, அடிப்படை ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி மகேஷ் ஷர்மா பதில் அளித்துள்ளார்.
5. மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமாக பேசினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...