தேசிய செய்திகள்

போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது + "||" + Fake employment website across the country including Chennai - 1 crore fraud - 22 people arrested

போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது

போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது
போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.
புதுடெல்லி,

போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் ஏராளமான இளைஞர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்தனர். ஐதராபாத்தை சேர்ந்த ஒரு மாணவர் அளித்த புகாரின்பேரில் அக்கும்பல் பிடிபட்டது.

டெல்லி ஜானகிபுரியில் அவர்கள் நடத்தி வந்த போலி கால்சென்டரில் போலீசார் சோதனை நடத்தி, 26 செல்போன்கள், 5 லேப்டாப்கள், 8 டெபிட், கிரெடிட் கார்டுகள், 2 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல், போலி வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்றையும், போலி கால்சென்டரையும் தொடங்கியது. வேலை தேடும் இளைஞர்களைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் திரட்டி, போலி கால்சென்டரில் இருந்து தொடர்பு கொண்டு, கனடாவில் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டியது.

அதற்கு கட்டணமாக பணம் வசூலித்தது. பிறகு, அந்த பணத்தை திருப்பித்தருவதாக கூறி, ஏ.டி.எம். கார்டு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கியது. அப்படியே அந்த இளைஞர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எடுத்து விட்டது. இதுபோன்று, சென்னை உள்பட நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.
2. டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு படை கைது செய்தது
புதுடெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகளை டெல்லி சிறப்பு படை போலீஸ் கைது செய்துள்ளது.
3. தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வில் தகவல்
தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 3–வது நாடு இந்தியா, என அமெரிக்க வெளியுறவுத்துறை நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
4. நாடாளுமன்றத்தில் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார் - அருண் ஜெட்லி
நாடாளுமன்றத்தில் நான் நடந்து சென்றபோது விஜய் மல்லையா என்னிடம் பேசினார். என்னை சந்திக்க அவருக்கு நேரம் எதுவும் ஒதுக்கவில்லை என்று அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார்.
5. புதுடெல்லி: ஜெயின் துறவி தருண் சாகர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்
ஜெயின் துறவியான தருண் சாகரின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #PMModi #JainMonkTarunSagar