தேசிய செய்திகள்

வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிரான சோனியா காந்தி, ராகுல் மனுக்கள் தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Sonia Gandhi, Rahul's petition against income tax notice - The Delhi High Court order

வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிரான சோனியா காந்தி, ராகுல் மனுக்கள் தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிரான சோனியா காந்தி, ராகுல் மனுக்கள் தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
வருமான வரித்துறை நோட்டீசுக்கு எதிரான சோனியா காந்தி, ராகுல் மனுக்கள் தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக வருமான வரித்துறை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருமான வரி மறுமதிப்பீடு கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.


ஐகோர்ட்டின் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் கொண்ட அமர்வு, வருமான வரித்துறைக்கு இதற்கான அதிகாரம் உள்ளது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோல காங்கிரஸ் முன்னணி தலைவர் ஆஸ்கர் பெர்னான்டசின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.