தேசிய செய்திகள்

லாலு பிரசாத் யாதவ் மன அழுத்தத்தில் இருக்கிறார்: மருத்துவ அறிக்கை + "||" + Lalu Prasad Yadav Suffering From Depression: Medical Report

லாலு பிரசாத் யாதவ் மன அழுத்தத்தில் இருக்கிறார்: மருத்துவ அறிக்கை

லாலு பிரசாத் யாதவ் மன அழுத்தத்தில் இருக்கிறார்: மருத்துவ அறிக்கை
லாலு பிரசாத் யாதவ் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று மருத்துவமனை மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஞ்சி,

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் பீகார் முதல்- மந்திரியாக பதவி வகித்த போது கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், தற்போது ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மன அழுத்தத்தில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ராஞ்சி மருத்துவமனை மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவ கல்வி மருத்துவமனை இயக்குநர் ஆர்.கே. ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் கூறுகையில், லாலுவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர்.
 
இதேபோல், லாலுவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவும் அறிக்கை அளித்திருந்தது என்றார்.  அப்போது ஸ்ரீவாஸ்தவாவிடம், லாலுவின் மனநிலை மனநல சிகிச்சை நிபுணர் மூலம் பரிசோதிக்கப்படுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐஆர்சிடிசி முறைகேடு: லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்
ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
2. லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல்
லாலு பிரசாத் யாதவ் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
3. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு மகன் மனு
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மகன் மனு தாக்கல் செய்துள்ளார்.
4. லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் திருமணமான 6 மாதங்களில் விவகாரத்து கோரி வழக்கு
லாலு மகன் தேஜ்பிரதாப் யாதவ் திருமணமான 6 மாதங்களில் விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
5. ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரண் அடைந்தார் லாலு பிரசாத் யாதவ்
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.