உயிரை பணயம் வைத்து ஓடும் ஆற்றை கடந்து பள்ளி கூடத்திற்கு செல்லும் மாணவ மாணவிகள்


உயிரை பணயம் வைத்து ஓடும் ஆற்றை கடந்து பள்ளி கூடத்திற்கு செல்லும் மாணவ மாணவிகள்
x
தினத்தந்தி 11 Sep 2018 3:27 AM GMT (Updated: 11 Sep 2018 3:34 AM GMT)

மத்திய பிரதேசத்தில் உயிரை பணயம் வைத்து ஓடும் ஆற்றை கடந்து மாணவ மாணவியர் பள்ளி கூடத்திற்கு செல்கின்றனர்.

தமோ,

மத்திய பிரதேசத்தின் தமோ நகரில் ஹட்டா மடியாடோ பகுதியில் அமைந்த பள்ளி கூடத்திற்கு தினமும் மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர்.

இவர்கள் செல்லும் வழியில் சிறிய ஆறு ஒன்று உள்ளது.  இந்த ஆற்றில் வேகமுடன் நீர் செல்லும் சூழ்நிலையில், மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.  இதனால் அந்த பகுதியை கடந்து செல்வதற்காக அங்கு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

ஆனால் நீண்டகாலம் பாலம் கட்டும் பணி தொடருகிறது.  இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் ஆபத்து நிறைந்த ஆற்று நீரில் உயிரை பணயம் வைத்து கடந்து பள்ளி கூடத்திற்கு செல்கின்றனர்.  அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி ஆற்று நீரை கடந்து செல்லும் காட்சி கேமிராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மாணவ மாணவிகள் சிலர் கூறும்பொழுது, மழை காலங்களில் ஆற்று நீரை கடப்பது என்பது அதிக சங்கடத்திற்குரிய வகையில் இருக்கும்.  இந்த சிறிய ஆற்றின் மேல் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.  ஆனால் நீண்டகாலம் இது கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.  எனவே பாலம் கட்டும் பணியை வேகமுடன் முடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.


Next Story