தேசிய செய்திகள்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராஜஸ்தான் பயணம் + "||" + Amit Shah to visit Jaipur on Tuesday

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராஜஸ்தான் பயணம்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று ராஜஸ்தான் பயணம்
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராஜஸ்தானுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.
புதுடெல்லி,

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று ராஜஸ்தான் செல்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டம் பற்றி மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் அருண் சதுர்வேதி கூறுகையில், “ ஜெய்ப்பூருக்கு இன்று காலை வரும் அமித் ஷா, முதலில் மோதி துங்காரி விநாயகர் கோயிலில் வழிபாடு செய்கிறார். 

அதன் பிறகு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளனம், சக்தி கேந்திர சம்மேளனம், அறிவுஜீவிகள் சம்மேளன கூட்டங்களில் பங்கேற்கிறார். அதன் பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேரணி ஒன்றில் உரையாற்றுகிறார் என்று அருண் சதுர்வேதி கூறினார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமித்ஷாவின் ராஜஸ்தான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. 2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு - அமித்ஷா
2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2. மும்பையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா திடீர் ஆலோசனை
மும்பையில் கட்சி நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா திடீர் ஆலோசனை நடத்தினார். மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனா தயாரிப்பு என ராகுல் விமர்சனம், அமித்ஷா பதிலடி
சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனா தயாரிப்பு என்ற ராகுல் காந்தி விமர்சனத்திற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
4. உண்மையோ, பொய்யோ எதையும் நம்மால் வைரலாக செய்ய முடியும் - அமித்ஷா தொண்டர்களிடம் பேச்சு
உண்மையோ, பொய்யோ எதையும் நம்மால் வைரலாக செய்ய முடியும் என தொண்டர்களிடம் அமித்ஷா பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
5. 2019-ல் வெற்றி பெறுவோம், 50 ஆண்டுகள் ஆட்சி செய்வோம் - அமித்ஷா பேச்சு
2019 பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.