தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த கொடுமைக்கார தாய் + "||" + Daddy Burnt Me When I Was Eating," Hyderabad 4-Year-Old Tells Rescuers R

கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த கொடுமைக்கார தாய்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து  பெற்ற குழந்தைக்கு சூடு வைத்த கொடுமைக்கார தாய்
கணவரை பழிவாங்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தைக்கு சூடு வைத்த கொடுமைக்கார தாயை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்

ஐதராபாத்தில் பெண் ஒருவர் தன்னுடைய காதலனுடன் இணைந்து கொண்டு, 4 வயது சிறுமியின் பின் பக்கத்தில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநிலம் மாலக்பெட் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரிதா. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகா தன்னுடைய கணவரை பிரிந்து காதலன் வெங்கட் ரெட்டியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று சரிதா தன்னுடைய கணவருடன் நடந்த சண்டைக்கு பழி தீர்க்க 4 வயது மகளை பயன்படுத்தியுள்ளார். இதனை அறிந்த கொண்ட பக்கத்து வீட்டார் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரிதா மற்றும் அவருடைய காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் உடல்முழுவதும் காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும், சிறுமியிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டது. அதில், முதலில் அப்பா தான் என்னை அடித்தார். பின்பு கரண்டியை அம்மா சூடு பண்ணி கொடுத்ததும், அதை வைத்து என்னுடைய பின் பக்கத்தில் சூடு போட்டார் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமியின் கை, கால்களின் பாதங்கள் மற்றும் உடல் பகுதியில் ஏராளமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.