தேசிய செய்திகள்

தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு பாதிரியார் பிராங்கோ மறுப்பு + "||" + Kerala bishop claims rape case against him is conspiracy against Church

தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு பாதிரியார் பிராங்கோ மறுப்பு

தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு பாதிரியார் பிராங்கோ மறுப்பு
கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாதிரியார் பிராங்கோ, தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம், 


கேரள மாநிலம் கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கோ, கன்னியாஸ்திரியின் பலாத்கார குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார், தேவாலயத்திற்கு எதிரான சதிதிட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் தேவாலயம் அமைதியாக இருக்கிறது என குற்றம் சாட்டும் கன்னியாஸ்திரி, இவ்விவகாரத்தில் நடவடிக்கைக்கு உதவுமாறு வாடிகனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் பாதிரியார் பிராங்கோ பேட்டியளித்து பேசியுள்ளார். 

 “கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராக இருப்பவர்கள் அனைவரும் கன்னியாஸ்திரிகளை பயன்படுத்துகிறார்கள். இதுவும் சதிதிட்டம்தான், இப்போதைய நிலைய பலரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். கன்னியாஸ்திரிகளை முன்னாள் நிற்கவைத்து அவர்கள் அனைத்தையும் இயக்கி வருகிறார்கள். கேரள போலீசாரிடம் 9 மணி நேரங்கள் பேசினேன். முன்ஜாமீன் தாக்கல் செய்ய என்னிடம் எந்தஒரு திட்டமும் கிடையாது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன், இதில் உண்மை வெளியேவர வேண்டும்,” என கூறியுள்ளார். தொடர்புடைய செய்திகள்

1. முகநூல் நட்பால் விபரீதம்: மயக்க மருந்து கொடுத்து கோவை ஆசிரியை பலாத்காரம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
முகநூல் மூலம் கோவை ஆசிரியையிடம் நட்பாக பழகிய வாலிபர் அவரை பலாத்காரம் செய்தார்.மேலும் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதா உண்ணாவிரதம்
கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் கைதை கண்டித்து பா.ஜனதாவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
4. சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே
பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
5. கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு ஜாமீன்
கன்னியாஸ்திரி பாலாத்கார வழக்கில் கைதான பேராயர் பிராங்கோவுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.