தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் புதிய கூட்டணி உதயம், ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல் + "||" + Congress, TDP, Left Form Alliance In Telangana, Demand President s Rule

தெலுங்கானாவில் புதிய கூட்டணி உதயம், ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல்

தெலுங்கானாவில் புதிய கூட்டணி உதயம், ஜனாதிபதி ஆட்சிக்கு வலியுறுத்தல்
தெலுங்கானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற காங்கிரஸ், தெலுங்கு தேசம் வலியுறுத்தியுள்ளது. #Telangana #Congress

 
தெலுங்கானா மாநில மந்திரிசபையின் சிபாரிசை ஏற்று, அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால், அங்கு இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது.

தெலுங்கானா சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பித்த இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார். 

தெலுங்கானாவில் மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்துவிடுவோம் என சந்திரசேகர் ராவ் நம்பிக்கையுடன் உள்ளார். காங்கிரசுக்கும் சவால் விடுத்துள்ளார். இப்போது அங்கு புதிய கூட்டணி உருவாகியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் காங்கிரசுடன் கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியை அமைத்துள்ளது. இன்று மாலையில் இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினார்கள், அப்போது மாநிலத்தில் சட்டசபையை கலைக்க வேண்டும், ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 

மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் முதல்வராக தொடர்ந்தால் உண்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைபெறாது, முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு செல்வோம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் வாக்குகளை பெற கட்டிங், ஷேவிங் செய்து குளிப்பாட்டும் வேட்பாளர்களால் மக்கள் எரிச்சல்
தெலுங்கானாவில் வாக்காளர்களை எப்படியாவது கவரவேண்டும் என்று வேட்பாளர்கள் செய்யும் செயல் மக்களை எரிச்சலடையை செய்துள்ளது.
2. தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள், தேர்தல் ஆணையம் ஆய்வு
தெலுங்கானா வாக்காளர்கள் பட்டியலில் 190 ரோஹிங்யாக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனை நீக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் மாநகராட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.
3. தெலுங்கானா காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
4. மகளின் கணவரை கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவிய தந்தை பரபரப்பு வாக்குமூலம்
மகளின் கணவரை கொலை செய்வதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவிய தந்தை பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
5. தெலுங்கானா முதல்வரின் உத்தேச தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
தெலுங்கானா முதல்வரின் உத்தேச தேர்தல் தேதி அறிவிப்புக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.