தேசிய செய்திகள்

ஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம் + "||" + BJP threw Hindutva ladder after coming to power Shiv Sena

ஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம்

ஆட்சியில் அமர்ந்ததும் இந்துத்துவா என்ற ஏணியை பா.ஜனதா தூக்கி எறிந்துவிட்டது - சிவசேனா விமர்சனம்
ஆட்சியை கைப்பற்ற இந்துத்வாவை ஏணியாக பயன்படுத்திய பா.ஜனதா, ஆட்சிக்கு வந்ததும் அதனை தூக்கி எறிந்துவிட்டது என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.

மும்பை,


மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணியில் உள்ள சிவசேனா தொடர்ந்து பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இப்போது இந்துத்துவா விவகாரத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை பயன்படுத்தியது போலவே, பா.ஜனதா இந்துக்களை பயன்படுத்திக்கொண்டது. ராமர் கோவில் கட்டுவது உள்ளிட்ட இந்துக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியை கூட பா.ஜனதா நிறைவேற்றவில்லை. 

பா.ஜனதாவில் தீவிர இந்துத்வா கொள்கைகள் இருந்தது. ஆனால் அந்த தீவிரம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மட்டுமே, ஆட்சிக்கு வந்ததும் குறைந்துவிட்டது. பா.ஜனதாவும், காங்கிரஸ் போல தான். குறைந்தது காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு அடிபணிந்து செயல்படுகிறது. ஆனால் பா.ஜனதா தங்கள் கொள்கையில் இருந்து விலகி, மதசார்பற்ற இந்துக்களை உருவாக்க முயற்சி செய்கிறது. 

இந்துக்கள் ஒன்றாக இணைந்து தீவிரமாக செயல்பட்டதால் தான் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர் ஆனார். ஆனால் அவர்கள் ஒன்றாக செயல்பட்டதற்கு என்ன பலன் கிடைத்தது? சிவசேனாவுடன் கூட்டணியை முறித்ததன் மூலம் இந்துத்வாவின் முதுகில் குத்தப்பட்டது. இந்துத்வா குறித்தும், நாடு குறித்தும் தீவிரமாக பேசியவர்கள் பா.ஜனதாவின் எதிரிகளாக மாற்றப்பட்டனர். இந்துத்வா என்ற ஏணியில் ஏறி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பா.ஜனதா, தங்கள் வேலை முடிந்ததும், ஏணியை தூக்கி எறிந்துவிட்டனர். 

சொந்த நாட்டிலேயே இந்துக்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதை பார்த்து வாய்திறக்காமல் மவுனம் காக்கும் போலி இந்துத்வாவாதிகள் தற்போது ஆட்சியில் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை - சந்திரபாபு நாயுடு தகவல்
பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார்.
2. சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்ற பா.ஜனதா தலைவருக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு, சரியாக பயன்படுத்த வேண்டும் - பா.ஜனதா தலைவர் பரபரப்பு பேச்சு
சபரிமலை போராட்டம் நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா தலைவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
4. என்னை கூட்டு பலாத்காரம் செய்வதாக பா.ஜனதாவினர் மிரட்டுகிறார்கள் - காங்கிரஸ் தொண்டர் குற்றச்சாட்டு
என்னை கூட்டு பலாத்காரம் செய்வதாக பா.ஜனதா தலைவரின் ஆதரவாளர்கள் மிராட்டுகிறார்கள் என காங்கிரஸ் பெண் தொண்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
5. ‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் - ஆந்திர அமைச்சர் பேட்டி
‘‘பிரதமர் மோடி ஒரு அனகோண்டா’’ சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை விழுங்குகிறார் என்று ஆந்திர மாநில அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.