தேசிய செய்திகள்

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம்பெறக்கூடாது தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை + "||" + EC for removal of NOTA from RS poll

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம்பெறக்கூடாது தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம்பெறக்கூடாது தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம்பெறக்கூடாது என மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உள்ளது போல, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற மேலவை தேர்தலிலும் ‘நோட்டா’வை (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வாய்ப்பு) அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’ ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இந்த மனு மீதான விசாரணையில் மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற மேலவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்தக்கூடாது என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. இந்த தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் ஓட்டுச்சீட்டில்   ‘நோட்டா’  பிரிண்டிங் செய்யப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.