தேசிய செய்திகள்

ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது + "||" + Rs. 8 lakh bribe was heard GST Superintendent arrested

ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது

ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது
ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி. சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

அரியானா மாநிலம் ரோதக்கில் மத்திய ஜி.எஸ்.டி. கமி‌ஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சுதேஷ் குமார். இவர், அந்த பகுதியில் ஒரு நிறுவனம் செய்த அரிசி விற்பனை மீது மத்திய ஜி.எஸ்.டி. (சரக்கு–சேவை வரி) விதிக்காமல் இருப்பதற்காக, ரூ.10 லட்சம் லஞ்சமாக தருமாறு கேட்டார். அந்த நிறுவன அதிபர், சூப்பிரண்டு சுதேஷ் குமாரை தனியாக சந்தித்து பேசினார். அப்போது, லஞ்ச தொகையை ரூ.8 லட்சமாக சுதேஷ் குமார் குறைத்துக்கொண்டார்.

நிறுவன அதிபர், ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட சுதேஷ் குமார், மீதி ரூ.7 லட்சத்தை விரைவில் தருமாறு கூறினார். இதுபற்றி அந்த நிறுவன அதிபர், சி.பி.ஐ.யில் புகார் செய்தார்.

அதன்பேரில், சுதேஷ் குமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி உள்ளிட்ட இடங்களில் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கமும், வணிக, குடியிருப்பு சொத்துகளுக்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சுதேஷ் குமார், அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் வாகன ஆய்வாளர்-புரோக்கர் வீடுகளில் சோதனை கோடிகணக்கில் நகை- பணம் பறிமுதல்
லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு- புரோக்கர் கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டது.
3. நில உரிமை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
நில உரிமை சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
4. வழக்கில் இருந்து விடுவிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு லஞ்சம் தர முயன்ற 2 பேர் கைது
வழக்கில் இருந்து விடுவிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு லஞ்சம் தர முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
5. மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, கோவை கோர்ட்டு தீர்ப்பு
கோவையில் மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.