தேசிய செய்திகள்

ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு + "||" + Petrol and Diesel tax reduction in West Bengal following Rajasthan and Andhra

ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு

ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு
ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்பட்டது.
கொல்கத்தா,

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. ஆனாலும் அவற்றின் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது.

மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிற வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் அவற்றின் விலை லிட்டருக்கு தலா ரூ.2.50 குறைந்து உள்ளது.


ஆந்திராவிலும் பெட்ரோல், டீசல் மீதான வரியில் தலா ரூ.2 குறைக்கப்படுவதாக அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்திலும் அவற்றின் மீதான வரியில் தலா ரூ.1 குறைப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை அவர் கொல்கத்தாவில் வெளியிட்டபோது, “இப்போதைக்கு பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு தலா ரூ.1 குறைக்க முடிவு செய்து உள்ளோம். மத்திய அரசும் அவற்றின் மீதான வரியைக் குறைக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறும்போது, “மத்தியில் அமைந்து உள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு 9 முறை பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் கூட்டி உள்ளது. ஆனால் நாங்கள் ஒருபோதும் அவற்றின் மீதான வரியை உயர்த்தியது இல்லை” என்று குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி. காங்கிரசில் இணைந்தார்
ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் கட்சியில் இணைந்தார்.
2. ராஜஸ்தான்: மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா
மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால். ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார்.
3. பகல் நேரங்களில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிப்பு : கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை
ஆந்திராவில் கிராமம் ஒன்றில் பகல் நேரங்களில் பெண்கள் நைட்டி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பயங்கரம்; ஜெகன் மோகன் ரெட்டிக்கு கத்திகுத்து!
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டியையை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
5. ராஜஸ்தானில் 31 மலைகள் மாயம்: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி
ராஜஸ்தானில் 31 மலைகள் மறைந்து விட்டதாக அரசு அளித்த அறிக்கையை பார்த்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது.