தேசிய செய்திகள்

பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி உறவினர் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்தார்- இயேசு சபை + "||" + Kerala rape case: Nun was in an ‘illicit relationship’ with a relative, claims Missionaries of Jesus

பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி உறவினர் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்தார்- இயேசு சபை

பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி  உறவினர் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்தார்- இயேசு சபை
பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி உறவினர் ஒருவருடன் கள்ள தொடர்பில் இருந்தார் என இயேசு சபையின் மிஷனரிகள் தெரிவித்துள்ளன.
திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்னும் அரசு விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலதடவை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால், நான் வெளியே சொல்லவில்லை. தற்போது நான் புகார் கொடுத்த பிறகும், திருச்சபை கண்ணை மூடிக்கொண்டிருப்பது ஏன்?

பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். ஆகவே, தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இயேசு சபையின் மிஷனரிகள், பிஷப்பை குற்றம் சாட்டியிருந்த கன்னியாஸ்திரி தனது உறவினர்களில் ஒருவருடன்  'சட்டவிரோத உறவு' வைத்து இருந்தார். அது குறித்து புகார் அளித்த பிஷப் பிராங்கோ 'புகார் மீது' கற்பழிப்பு குற்றம் சுமத்தி உள்ளதாக கூறி உள்ளது.இந்த வழக்கில் உண்மையைக் கொண்டுவருவது அவர்களுடைய தார்மீக மற்றும் தெய்வீக பொறுப்பு என்று கூறி உள்ளது.

கன்னியாஸ்திரிகளால்  நடத்தப்பட்ட போராட்டம் தேவாலயத்தையும் சபையையும் அழிக்க ஒரு திட்டத்தின் பாகமாக இருந்தது. என கூறி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...