தேசிய செய்திகள்

பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி ஆசை காட்டும் பிஷப் - கன்னியாஸ்திரி சகோதரர் குற்றச்சாட்டு + "||" + Was offered Rs 5 crore to spare bishop in rape case: Kerala nun's brother

பாலியல் புகாரை வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி ஆசை காட்டும் பிஷப் - கன்னியாஸ்திரி சகோதரர் குற்றச்சாட்டு

பாலியல் புகாரை  வாபஸ் பெற்றால் ரூ. 5 கோடி ஆசை காட்டும் பிஷப் - கன்னியாஸ்திரி சகோதரர்  குற்றச்சாட்டு
தன் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்று கொண்டால் ரூ 5 கோடி தருவதாக பிஷப் ஆசை காட்டுவதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கொச்சி

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்னும் அரசு விசாரணையில் திருப்தி ஏற்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஆனால் பிஷப் பிராங்கோ தன் மீதான புகாரை மறுத்து உள்ளார்.

இந்த நிலையில் இந்த  விவகாரத்தில் தன் மீதான வழக்கை வாபஸ் பெற்று கொண்டால் ரூ 5 கோடி தருவதாக கூறியதாக பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் கூறி உள்ளார்.

பிராங்கோ முலக்கல்  மற்றும் 2 பாதிரியார்கள் பாதிக்கபட்ட பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி  பிஷப் மீதான புகாரை வாபஸ் பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருவதாக  கூறி உள்ளதாக கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்: பேராயரிடம் 8 மணி நேரம் விசாரணை இன்றும் தொடர்கிறது
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் பேராயர் பிராங்கோ மூலக்கல்லிடம் போலீசார் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர் . இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
2. கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் : பிஷப்புக்கு விசாரணை குழு சம்மன்
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பேராயர் பிராங்கோ முலக்கல்லுக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...