பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? மத்திய அரசு விளக்கம் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு


பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்  என்ன? மத்திய அரசு விளக்கம் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2018 7:41 AM GMT (Updated: 12 Sep 2018 7:41 AM GMT)

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி

சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று விற்கும் விலையிலேயே இன்றும் விற்கிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும்.

இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி சில நாட்களுக்கு முன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த பூஜா மகாஜன் என்பவரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.

இதை டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி கே ராவ் விசாரித்தனர். இதில் தற்போது முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த முடியாது. இதை செய்வது எங்களுடைய வேலை கிடையாது. இது அரசின் பொருளாதார கொள்கை தொடர்பானது.

இதில் பல விஷயங்களை மாற்றி அரசு தான் விலையை குறைக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என்று டெல்லி ஐகோர்ட்  தீர்பளித்துள்ளது.

அதேசமயம் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் கேட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 16-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Next Story