தேசிய செய்திகள்

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி + "||" + I met Jaitley in Parliament and told him I was going to London says Mallya

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி

அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் - விஜய் மல்லையா மீண்டும் பேட்டி
அருண் ஜெட்லியை பாராளுமன்றத்தில் சந்தித்தேன் என விஜய் மல்லையா கூறியுள்ளார்.

லண்டன், 


வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையா நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன் என்று லண்டனில் கூறியது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.  விஜய் மல்லையா நிதியமைச்சரை சந்தித்தேன் என்று பேட்டியளித்ததும் இவ்விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ், சந்திப்பில் யார் இருந்தது என்பதை விளக்குமாறு மத்திய அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய் மல்லையாவிடம் இருந்து இதுபோன்ற பேட்டி வெளியாகியதும் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜெட்லியின் விளக்கத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, ஜெட்லியிடம் பாராளுமன்றத்தில்தான் பேசினேன். அதிகாரப்பூர்வமான சந்திப்பு கிடையாது. யாரும் என்னை காப்பாற்றவில்லை, நான் ஓடவேண்டிய அவசியம் கிடையாது, என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மீடியாக்கள் உருவாக்கியதுதான். லண்டன் செல்லப்போகிறேன் என அருண் ஜெட்லியிடம் கூறினேன் எனவும் குறிப்பிட்டார். தொடர்புடைய செய்திகள்

1. ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதலுக்கு இடையே பிரதமரை ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தித்ததாக தகவல்
ரிசர்வ் வங்கி - மத்திய அரசு மோதலுக்கு இடையே பிரதமர் மோடியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி, தோல்வி அடைந்த திட்டம் - அருண் ஜெட்லி தாக்கு
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் எனவும், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வி அடைந்த திட்டம் எனவும் நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.
3. ஆதாரை அறிமுகம் செய்தது காங்கிரஸ் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது- அருண் ஜெட்லி
ஆதாரை அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒன்றும் தெரியாது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
4. பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை
பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செவ்வாய்க்கிழமை(இன்று) ஆலோசனை நடத்த உள்ளார்.
5. ‘‘அருண் ஜெட்லியுடனான பேரத்தால் விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதி’’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அருண் ஜெட்லி–விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.