தேசிய செய்திகள்

‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம்’ - நிதி அமைச்சகம் + "||" + "We will do everything to stop the rupee depreciation" - Finance Ministry

‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம்’ - நிதி அமைச்சகம்

‘ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம்’ - நிதி அமைச்சகம்
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம் என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
புதுடெல்லி,

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்று சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.72.91 ஆனது. வர்த்தக போர் அச்சம், வங்கிகள், இறக்குமதியாளர்கள் குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இடையே அமெரிக்க டாலருக்கு ஏற்பட்டு உள்ள தொடர் கிராக்கி ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது என்று கூறப்படுகிறது.


ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர், “ரூபாய் நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எல்லாவற்றையும் செய்யும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.