பணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது - மத்திய அரசு தகவல்


பணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 7:20 PM GMT)

பணவீக்கம் 3.69 சதவீதமாக குறைந்தது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்த ஆண்டு சில்லரை விற்பனை பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 4.17 சதவீதமாக இருந்ததாகவும், இது ஆகஸ்டு மாதம் 3.69 சதவீதமாக குறைந்ததாகவும் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சில்லரை பணவீக்கம் 3.28 சதவீதமாக இருந்தாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 1.30 சதவீதமாக இருந்த உணவுப்பொருள் பணவீக்கம் ஆகஸ்டு மாதத்தில் 0.29 சதவீதமாக குறைந்ததாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (ஆகஸ்டு) உணவுப்பொருள் பணவீக்கம் 1.52 சதவீதமாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொழில்துறையின் உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதத்தை எட்டியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story