” இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும்” ஆப்பிள் வாட்ச் 4 அறிமுகம்


” இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும்” ஆப்பிள் வாட்ச் 4 அறிமுகம்
x
தினத்தந்தி 12 Sep 2018 7:47 PM GMT (Updated: 12 Sep 2018 7:47 PM GMT)

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது.

கலிபோர்னியா,

முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதன் டிசைன் மட்டுமின்றி UI-ம் முழுவதுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S4 சிப் சிப்செட், இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது; டூயல் கோர்  64-பிட் புராஸசர் இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படும்.

இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் வாட்ச் 4 செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் ஸ்டோர்களை தற்பொழுது 500 மில்லியன் பேர் வரை பார்வையிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story