தேசிய செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை + "||" + Double leaf logo case: Inquiry again today in the Delhi High Court

இரட்டை இலை சின்னம் வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

இரட்டை இலை சின்னம் வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
புதுடெல்லி,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் கமிஷன் வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில் செம்மலை தரப்பு வக்கீல் ஆஜர் ஆனார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் டெல்லி ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
டெல்லியில் ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாக்கியவனை போலீஸ் கைது செய்தது
புதுடெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி மகன் ரோஹித்தை போலீஸ் கைது செய்துள்ளது.
3. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் இலக்கு டெல்லி கிடையாது - போலீஸ்
டெல்லி செங்கோட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இரு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
4. டெல்லியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது
டெல்லியில் கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
5. வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் : டெல்லியில் பல சாலைகளில் இன்று வாகன போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு
வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் காரணமாக டெல்லியில் பல சாலைகளில் இன்று வாகன போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.