தேசிய செய்திகள்

தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - டெல்லியில் நடந்தது + "||" + The World Investors Conference of the Government of Tamil Nadu - held in Delhi

தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - டெல்லியில் நடந்தது

தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - டெல்லியில் நடந்தது
டெல்லியில் தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தொழில் நிறுவனங்களுக்கான விளக்க கருத்தரங்கு நடைபெற்றது.
புதுடெல்லி,

தமிழ்நாடு அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 23 மற்றும் 24-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்தும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில் உள்ள அணுகூளங்கள் குறித்தும் பிற மாநிலங்களில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு விளக்குவதற்காக, கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் மும்பையில் நடந்த கருத்தரங்கு நேற்று டெல்லியில் நடந்தது.


டெல்லி கருத்தரங்கில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் (தொழிற்சாலைகள்) கே.ஞானதேசிகன், முதலீடு, தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி பிரிவு செயல் துணைத்தலைவர் எம்.வேல்முருகன் ஆகியோர் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்தனர். மேலும், தமிழகத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள சில நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது அனுபவங்களை எடுத்துக்கூறினார்கள்.

இந்த கருத்தரங்கில் மெட்ரோ டயர், அப்பல்லோ டயர் மற்றும் குளோபல் ஜியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.