தேசிய செய்திகள்

விஜய் மல்லையாவை தப்பவிட்டது சிபிஐ, உத்தரவிட்டது பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு + "||" + Rahul alleges involvement of PM in Mallya s escape

விஜய் மல்லையாவை தப்பவிட்டது சிபிஐ, உத்தரவிட்டது பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய் மல்லையாவை தப்பவிட்டது சிபிஐ, உத்தரவிட்டது பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #VijayMallya #ArunJaitley

புதுடெல்லி,


இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. விஜய் மல்லையா வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ல் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகவந்த விஜய் மல்லையா பேசுகையில், நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சரை சந்தித்தேன் என்றது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

 அருண் ஜெட்லி தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது, காங்கிரஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.  

இப்போது விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

  “ லுக் அவுட் சுற்றறிக்கையில் கைது செய்யுங்கள் என்பதை தகவல் தெரிவியுங்கள் என திருத்தம் செய்து விஜய் மல்லையாவை சிபிஐ நேர்த்தியாக தப்பவிட்டுள்ளது. சிபிஐ நேரடியாக பிரதமரிடம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வழக்கில் பிரதமர் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையில் மாற்றம் செய்தது என்பது வியப்புக்குரியது” என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. மோசடி வழக்கில் 2015-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதியே சிபிஐ வழக்குப்பதிவு செய்தும் விஜய் மல்லையாவிற்கு எதிராக நடவடிக்கையை எடுப்பதில் மோடி அரசு தோல்வியை தழுவிவிட்டது என காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது - சத்ருகன் சின்கா
மம்தாவின் பேரணி ஜனநாயகத்தை காக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது என சத்ருகன் சின்கா கூறியுள்ளார்.
2. கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கோவிலில் ரூ.92.22 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
3. தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகள் -பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் சகோதர-சகோதரிகளுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
4. சீக்கிய குரு பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
சீக்கிய குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு நாணயம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு உள்ளார்.
5. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? - அமித்ஷா எச்சரிக்கை
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தோற்றால்...? நாடு 200 ஆண்டுகள் அடிமையானதைப் போல் ஆகிவிடும் என அமித்ஷா கூறினார்.