தேசிய செய்திகள்

மோடிஜி ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு என்கிறீர்கள், எப்படி செய்யப்போகிறீர்கள்’ தாய் கண்ணீர் பேட்டி + "||" + Student who topped Class 12 board exam allegedly gangraped in Haryana

மோடிஜி ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு என்கிறீர்கள், எப்படி செய்யப்போகிறீர்கள்’ தாய் கண்ணீர் பேட்டி

மோடிஜி ‘பெண் குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு என்கிறீர்கள், எப்படி செய்யப்போகிறீர்கள்’ தாய் கண்ணீர் பேட்டி
அரியானாவில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


அரியானாவின் கைரானாவில் பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவியை கும்பல் ஒன்று காரில் கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசு தலைவர் பதக்கம் பெற்றவர். மாணவியை ஏற்கனவே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பாலியல் பலாத்கார விவகாரத்தில் பா.ஜனதா அரசு மெத்தனத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் பேசுகையில், ‘‘எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பலுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பாதுகாப்போம் என்று சொல்கிறீர்கள் மோடிஜி, ஆனால் எப்படி செய்யப்போகிறீர்கள்? என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்,” என கண்ணீருடன் பேசியுள்ளார். 

மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது, வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு
டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
3. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
4. பள்ளி மாணவியை கடத்திய 3 இளைஞர்கள் -ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம்
ஈரோட்டில் பள்ளி மாணவியை கடத்தி ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
5. 11-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் 4 என்ஜினியரிங் மாணவர்கள் கைது
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 11-ம் வகுப்பு மாணவியை 4 என்ஜினியரிங் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.