2019-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்களே இருக்காது - அகிலேஷ் யாதவ் பேச்சு


2019-ல் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், இனி தேர்தல்களே இருக்காது - அகிலேஷ் யாதவ் பேச்சு
x
தினத்தந்தி 14 Sep 2018 2:32 PM GMT (Updated: 14 Sep 2018 2:32 PM GMT)

2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல்களே இருக்காது என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


லக்னோ,

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களையும் தொடங்கிவிட்டது. 

சமாஜ்வாடி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், “டெல்லியில் உள்ள மத்திய அரசு இப்போது ஜனநாயகத்தை கொலை செய்ய முயற்சி செய்து வருகிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தல்களே இருக்காது. நாங்கள் மட்டும் கிடையாது, சமூதாயம் தொடர்பாக யோசிப்பவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் இதைத்தான் செல்கிறார்கள். பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இங்கு ஜனநாயகம் என்ற ஒன்றே இருக்காது. இனி தேர்தல்களும் இருக்காமல் போகலாம். இப்போது ஜனநாயகத்தை காப்பாற்ற 2019 பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும்,” என கூறியுள்ளார்.

Next Story