தொழுநோயாளிகள் மறுவாழ்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


தொழுநோயாளிகள் மறுவாழ்வு: மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Sep 2018 9:00 PM GMT (Updated: 14 Sep 2018 8:00 PM GMT)

தொழுநோயாளிகள் மறுவாழ்வுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் பங்கஜ் சின்ஹா என்பவர், தொழுநோயை ஒழிக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தொழுநோயை ஒழிக்கவும், அந்நோயாளிகளின் மறுவாழ்வுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.

தொழுநோயாளிகளுக்கு ஒதுக்கீடு, நலத்திட்டங்கள் கிடைக்க இயலாதோர் சான்றிதழ் வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்து குழந்தைகளிடம் வேற்றுமை காட்டக்கூடாது. இவைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் தனி சட்டம் இயற்ற வேண்டும். அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் பாகுபாடு பார்ப்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்நோயாளிகள் தனிமைப்படுத்தப்படாமல், இயல்பான திருமண வாழ்க்கை வாழ தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story