துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம்
x
தினத்தந்தி 14 Sep 2018 9:45 PM GMT (Updated: 14 Sep 2018 8:34 PM GMT)

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஒரு வார கால பயணமாக செர்பியா, மால்டா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு நேற்று பயணத்தை தொடங்கினார். அவருடனான குழுவில் மத்திய நிதித்துறை இணை மந்திரி சிவபிரதாப் சுக்லா, எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், பிரசன்னா ஆச்சார்யா, ராகவ் லக்கன்பால், சரோஜ் பாண்டே ஆகியோரும் சென்றுள்ளனர்.

வெங்கையா நாயுடு, முதலில் செர்பியா நாட்டின் பெல்கிரேடு நகருக்கு செல்கிறார். அங்கு இந்தியர்களின் வரவேற்பு, இந்திய-செர்பிய வர்த்தக கூட்டமைப்பு கூட்டம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது, அதிபர் அலெக்சாண்டர் வுசிக்குடன் பேச்சுவார்த்தை, விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பது, ஒப்பந்தங்கள் கையெழுத்து, சுவாமி விவேகானந்தர் நினைவு தபால் தலை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பின்னர், மால்டா நாட்டுக்கு செல்லும் வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் மேரி லூயிஸ்கொலேரோ பிரெகாவுடன் பேச்சுவார்த்தை, விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இறுதியாக, ருமேனியா நாட்டுக்கு வெங்கையா நாயுடு செல்கிறார். அந்நாட்டு அதிபர் கிளாஸ் வார்னர், பிரதமர் வியோரிகா டான்சிலா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.



Next Story