தேசிய செய்திகள்

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Encounter underway between terrorists, security forces in J-K: 3 terrorists killed

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்முவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மாநிலம் காசிகுந்த் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Qazigund
குல்காம்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் காசிகுந்த் பகுதியில் அமைந்திருக்கும் சோவ்காம் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இரண்டு முதல் மூன்று தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் நேற்றிரவு முதல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த பயங்கர மோதலில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கி சண்டை நடைபெற்ற சோவ்காம் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் காசிகுந்த் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாராமுல்லா- காசிகுந்த் பகுதிக்கு இயக்கப்படும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...