தேசிய செய்திகள்

காதல் திருமணம் : காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த காதலியின் தந்தை + "||" + Horrific murder in Telangana, man hacked to death in front of pregnant wife

காதல் திருமணம் : காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த காதலியின் தந்தை

காதல் திருமணம் : காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த காதலியின் தந்தை
தெலுங்கான மாநிலத்தில் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் 6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த   பினராய்- அம்ருதா ஜோடியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்  காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பினராயின் தலையில் தாக்கியுள்ளார். 

தன்னை காத்துக் கொள்ள அந்த நபருடன் பினராயி சண்டையிட்டபோதும், பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார்.  தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்படுவதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.

ஆனால் மற்றொரு பெண் அம்ருதாவை அடிப்பதற்கு துரத்தியுள்ளார். அப்பெண்ணிடம் இருந்து தப்பிப்பதற்காக அம்ருதா ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரணையில், அம்ருதா உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்றும், தாழ்ந்த சாதியை சேர்ந்த பினராயி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அம்ருதாவின் தந்தை ஆட்களை வைத்து பினராயை கொலை செய்துள்ளார் என பினராயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.ஆசிரியரின் தேர்வுகள்...