தேசிய செய்திகள்

ஜே.என்.யூ: மாணவர் சங்க தேர்தலில் மோதல், வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் + "||" + JNU election: Vote counting suspended after two candidates try to snatch away ballot boxes

ஜே.என்.யூ: மாணவர் சங்க தேர்தலில் மோதல், வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

ஜே.என்.யூ: மாணவர் சங்க தேர்தலில் மோதல், வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் மாணவர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது மோதல் ஏற்பட்டதால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று இரவு 10 மணியளவில் எண்ணப்பட்டது. 

ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த போது, மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்ட இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை தூக்கிச்செல்ல இரு வேட்பாளர்கள் தரப்பிலும், முயற்சித்தாகவும் கூறப்படுகிறது. இதனால், வாக்கு எண்ணும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏபிவிபி இணை செயலாளர் சவுரவ் சர்மா, இடதுசாரி வேட்பாளர் கட்டளைப்படி தேர்தல் நிர்வாகம் செயல்படுவதாகவும், நாங்கள் இல்லாத நேரத்தில் வாக்கு எண்ணும் பணி துவங்கியதால், மீண்டும் வாக்கு எண்ணும் பணியை துவங்க வேண்டும் என்று எங்கள் தரப்பில் கோரிக்கை வைத்தோம். ஆனால், தேர்தல் நிர்வாக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்,  மறு வாக்கு எண்ணிக்கை நடத்த மாட்டோம் என கூறிவிட்டனர்” என்றனர். 

ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கூற்றுப்படி, வாக்கு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே  நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. தற்போது 10 மணி நேரத்திற்கு மேலாகியும் இந்த பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. 

ஆசிரியரின் தேர்வுகள்...