தேசிய செய்திகள்

கோவா முதல் மந்திரி பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி + "||" + Parrikar admitted to AIIMS

கோவா முதல் மந்திரி பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல் மந்திரி பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல் மந்திரி பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மதியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
புதுடெல்லி,

கோவாவில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் (வயது 62) தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  

கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர்  ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பாரிக்கர் சிகிச்சை முடிந்து கடந்த 7ந்தேதி அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.  எனினும் அவர் தனது இல்லத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வியாழ கிழமை அவர் கண்டோலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று மதியம் சிறப்பு விமானம் ஒன்றில் புதுடெல்லி சென்ற அவர் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மதியம் 1.15 மணியளவில் தனி வார்டு ஒன்றில் சேர்க்கப்பட்டு மருத்துவர் பிரமோத் கார்க் தலைமையின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.