தேசிய செய்திகள்

மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி; 23 பேர் தலைமறைவு - காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Modi's 4-year rule: Rs 90,000 crore fraud in banks 23 persons hide out - Congress accusation

மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி; 23 பேர் தலைமறைவு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

மோடியின் 4 ஆண்டு கால ஆட்சி: வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி; 23 பேர் தலைமறைவு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி மோசடி மற்றும் 23 பேர் தலைமறைவாகி உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்வீர் ஷெர்கில் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடியின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சி காலத்தில் வங்கிகளில் ரூ.90 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், 2014-15-ல் ரூ.19,455 கோடி, 2015-16-ல் ரூ.18,698 கோடி, 2016-17-ல் ரூ.23,933 கோடி, 2017-18-ல் 25,459 கோடி பணம் இந்திய வங்கிகளில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.


கடனை வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்பட 23 பேர் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் வெளிநாடு செல்ல சுற்றுலா ஏஜெண்டுகள் போல மோடி அரசு உதவி செய்து உள்ளது. இந்த அரசு சாதாரண மக்களை விட பெரும் பணக்காரர்களையும், தொழில் அதிபர்களையும் பாதுகாப்பதில்தான் அக்கறையுடன் இருக்கிறது. எனவே வங்கி மோசடி தொடர்பாக பாரபட்சம் இல்லாத விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது - இல.கணேசன் எம்.பி. பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி உறுதி. மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.
2. மோடியும், அமித்ஷாவும் ‘ரிங் மாஸ்டர்கள்’ அல்ல; ‘கிங் மாஸ்டர்கள்’ தமிழிசை சவுந்தரராஜன் பதில்
மோடியும், அமித்ஷாவும் கிங் மாஸ்டர்கள் என்று மு.க.ஸ்டாலின், தம்பிதுரைக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
3. சிபிஐ அதிகாரிகள் நீக்கம் விவகாரம் ‘காங்கிரஸ் அற்பமான அரசியல் செய்கிறது’ பா.ஜனதா பதிலடி
சிபிஐ அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் அற்பமான அரசியலை செய்கிறது என பா.ஜனதா பதிலடியை கொடுத்துள்ளது.
4. எங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை திரும்ப தாருங்கள் மோடி அவர்களே!
எங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை திரும்ப தாருங்கள் பிரதமர் மோடி அவர்களே என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
5. பிரதமர் பதவி விலக வேண்டும் ; இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.