தேசிய செய்திகள்

அரியானா மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர் + "||" + Rewari gang-rape case: Haryana Police releases pictures of three accused; raids continue

அரியானா மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்

அரியானா மாணவி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்
அரியானா மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். #HaryanaCase
புதுடெல்லி,

அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர்  ஒரு 19 வயதுப் பெண். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம்  விருது பெற்றவர் ஆவார்.

அவர் கடந்த 12-ஆம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்தப் பெண் தன்னை வன்கொடுமை செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என அரியானா முதல்வர் கூறி உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து  சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.  பாதிக்கப்பட்ட பெண் 3 குற்றவாளிகள் குறித்த தகவலை கூறி உள்ளார். தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கலாம் என கூறி உள்ளார். இதில் முக்கிய குற்றவாளி  ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என தெரியவந்து உள்ளது. பங்கஜ் என்ற ராணுவ வீரரின் புகைப்படத்தை அரியானா  போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மணீஷ் மற்றும் நிஷ்ஷூ என்ற இரு வாலிபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்களின் புகைப்படம் போலீசாரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மூவரையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அரியானா மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.