மத்திய அரசு அனுமதித்தால் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பேன் -பாபா ராம்தேவ்


மத்திய அரசு அனுமதித்தால் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பேன் -பாபா ராம்தேவ்
x
தினத்தந்தி 17 Sep 2018 11:24 AM GMT (Updated: 17 Sep 2018 11:24 AM GMT)

மத்திய அரசு அனுமதித்தால் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பேன் என பாபா ராம்தேவ் தடாலடியாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் நான் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ராம்தேவ், பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை குறைக்க பா.ஜனதா அரசும், மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு அனுமதித்தால் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பேன் என்று கூறியுள்ளார்.  

மத்திய அரசு எனக்கு அனுமதி மற்றும் சில வரிவிதிப்பு சலுகைகளை  வழங்கினால், என்னால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.35 - 45க்கு கொண்டு வர முடியும் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் மத்திய தொகுப்பு வரியை குறைக்க அரசு மறுத்துவரும் நிலையில், வருமானம் குறைந்தால் இந்தியாவால் செயல்பட முடியாது, எனவே பணக்காரர்களிடம் இருந்து வரிவசூலித்து இதனை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story