தேசிய செய்திகள்

சிறுமி கடத்தி செல்லப்பட்டு 28 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் + "||" + Gang-raped for 28 days and thrown into a river, brave Odisha girl swims to safety

சிறுமி கடத்தி செல்லப்பட்டு 28 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்

சிறுமி கடத்தி செல்லப்பட்டு 28 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்
ஒடிசா சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 28 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வர்

ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் கடந்த ஞாயிறு  கரோஹஸ்த்ரா ஆற்றுப்பகுதில் மீட்கப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை அப்பகுதி மக்கள் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது இச்சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.


இதனையடுத்து காவல்துறையினர் இச்சிறுமியை விசாரிக்கையில், குஷாக்கிப் பகுதிகுட்பட்ட ரவுத்ரபூர் கிராமத்தை சேர்ந்த இவர் கடந்த மாதம் 20-ஆம் நாள் மதுபான் பஜார் சென்றபோது மர்ம  கும்பலால்  கடத்தப்பட்டுள்ளார். அந்த கும்பலால்  28 நாட்கள் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யபட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை  தாக்கி ஆற்றில் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. விசாரணையில் சிறுமி கடத்தப்பட்ட நாள் அன்று அவரது உறவினர் ஒருவர்  வீட்டியில் இருந்து அவரை அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் உறவினர் உள்பட இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.