தேசிய செய்திகள்

சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளியின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை + "||" + SC stays death penalty of man convicted for rape-murder of 4-year old

சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளியின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளியின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
4 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதித்த மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தினை சேர்ந்த வினோத் (வயது 22) என்பவன் கடந்த வருடம் மே 13ந்தேதி 4 வயது சிறுமியை கற்பழித்து கொன்று புதரில் வீசி சென்றுள்ளான்.

இதுபற்றி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 28ந்தேதி நடந்த வழக்கு விசாரணையில் வினோத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் விதித்தது.  இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதனை எதிர்த்து வினோத் சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் வலைதளத்தில் இன்று வெளியிடப்பட்ட உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு
ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டை நீட்டித்துள்ளார்.
2. ரபேல் விவகாரம்: ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் மோடி, அரசுக்கு காங்கிரஸ் சவால்
ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடுங்கள் பார்க்கலாம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது.
3. நிர்பயா வழக்கு; குற்றவாளிகளுக்கு உடனடி மரண தண்டனை நிறைவேற்ற கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உடனடி மரண தண்டனை நிறைவேற்ற கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
4. மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு
மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
5. கற்பழிப்பில் பாதிக்கப்பட்டோரின் பெயர், அடையாளங்களை வெளியிட கூடாது; ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கற்பழிப்பில் பாதிக்கப்பட்டோரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட கூடாது என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டு உள்ளது.