தேசிய செய்திகள்

எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம் + "||" + BSF Soldier s Throat Slit By Pak Troops Near International Border Report

எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்

எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
சர்வதேச எல்லையில் இந்திய ராணுவ வீரரை கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு/புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் மேலும் இருநாடுகள் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனையடுத்து சர்வதேச எல்லை மற்றும் எல்லைப் பாதுகாப்பு கோடு பகுதியில் பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 உயிரிழந்த எல்லைப் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் நரேந்திர குமாரின் உடலில் மூன்று இடங்களில் குண்டுகாயம் உள்ளது என அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. ராணுவ வீரர் நரேந்திர குமார் மாயமானதை தேடும் பணியை இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அவருடைய சடலத்தை மீட்டுள்ளது. ராணுவ வீரரின் மார்பு பகுதி, கால் பகுதியில் குண்டு காயம் உள்ளது. அவருடைய கழுத்து பாதி அறுப்பட்ட நிலையில் இருந்துள்ளது, அவருடைய உடல் முழுவதும் கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் உள்ளது. பாகிஸ்தானின் இந்த அடாவடியான செயலுக்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் - 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியில் 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் : இந்திய அணி முதலில் பந்து வீச்சு
பெர்த் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3. இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி சுயேட்சையிடம் படுதோல்வி
இந்தியாவின் முதல் பசு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜஸ்தானில் சுயேட்சையிடம் படுதோல்வி அடைந்தார்.
4. பாகிஸ்தானில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு
பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அமைச்சர் முன்னிலையில் நடந்த சார்க் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளிநடப்பு செய்து உள்ளது.
5. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்த அஸ்வின், ஷமி!
அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.