தேசிய செய்திகள்

மற்ற ஆண்களுடன் பேசியதில் ஆத்திரம்; நடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது + "||" + Man throws chemical on dancer in MP, arrested

மற்ற ஆண்களுடன் பேசியதில் ஆத்திரம்; நடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது

மற்ற ஆண்களுடன் பேசியதில் ஆத்திரம்; நடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது
மத்திய பிரதேசத்தில் மற்ற ஆண்களுடன் பேசிய ஆத்திரத்தில் நடன அழகி மீது ஆசிட் வீசிய காதலர் கைது செய்யப்பட்டார்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் புகழ் பெற்ற நாட்டுப்புற நடன குழுவில் 21 வயது ரூபாளி நிராபுரே என்ற இளம்பெண் ஒருவர் உறுப்பினராக உள்ளார்.  இவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

இவரது காதலர் மகேந்திர சென் என்ற மோனு (வயது 23).  இளம்பெண் நடன நிகழ்ச்சிக்காக அடிக்கடி வெளியூருக்கு செல்வதும் மற்றும் பிற ஆண்களை சந்தித்து பேசியும் வந்துள்ளார்.  இதற்கு காதலர் மோனு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். 

இந்நிலையில் பங்கங்கா பகுதிக்கு இளம்பெண்ணை வர சொன்னார் மோனு.  அங்கு முகமூடி அணிந்திருந்த மோனு இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.  இது சி.சி.டி.வி. கேமிராவிலும் பதிவாகி உள்ளது.

இதனை அடுத்து இளம்பெண்ணுக்கு பார்வை தெளிவாக தெரியவில்லை.  அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இளம்பெண்ணின் முகத்தில் தீ காயம் எதுவும் இல்லை.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அதில், நீண்ட காலம் ஆக மோனு இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

நடன நிகழ்ச்சிக்காக இளம்பெண்அடிக்கடி வெளியூருக்கு செல்வதும் மற்றும் பிற ஆண்களை சந்தித்து பேசி வந்ததும் மோனுவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் தகராறு: பெண் கொலை, 3 வாலிபர்கள் கைது
இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
2. காதலை துண்டித்ததால் ஆத்திரம் இளம்பெண்ணுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டல் வாலிபர் கைது
காதலை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதலியுடன் சேர்ந்து தான் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
3. கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
சொந்த ஊருக்கு செல்ல ரெயிலுக்கு நேரமாகி விட்டதால், ரெயில் புறப்படும் நேரத்தை தாமதப்படுத்துவதற்காக கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. பீடி கேட்டதால் ஏற்பட்ட தகராறு: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை; நண்பர் கைது
அவினாசி அருகே பீடிகேட்டதால் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
5. சென்னை தண்டையார்பேட்டையில் சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
தண்டையார்பேட்டையில், 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.