தேசிய செய்திகள்

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: பேராயரிடம் 7 மணி நேரம் விசாரணை + "||" + Kerala nun rape Archbishop of Inquiry to 7 hours

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: பேராயரிடம் 7 மணி நேரம் விசாரணை

கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு: பேராயரிடம் 7 மணி நேரம் விசாரணை
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் (வயது 54) கற்பழித்தாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

கொச்சி,

கற்பழிப்பு விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பேராயருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி கொச்சியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நேற்று காலையில் பேராயர் பிராங்கோ ஆஜரானார். அவரிடம் முதற்கட்டமாக 7 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்கு இன்று (வியாழக்கிழமை) ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

முன்னதாக இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பேராயர் பிராங்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை 25–ந்தேதி நடக்கிறது. அவரை கைது செய்வதற்கு எந்த தடையும் தற்போது இல்லை என்றாலும், 25–ந்தேதி வரை போலீசார் கைது நடவடிக்கையை எடுக்கமாட்டார்கள் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பேராயரை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகளும், கத்தோலிக்க சீர்திருத்த அமைப்புகளும் நடத்தி வரும் போராட்டம் நேற்று 12–வது நாளை எட்டியது.