தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி பலூன் போல உடைந்துவிடும்: மத்திய அமைச்சர் விமர்சனம்


தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி பலூன் போல உடைந்துவிடும்: மத்திய அமைச்சர் விமர்சனம்
x
தினத்தந்தி 20 Sep 2018 7:14 AM GMT (Updated: 20 Sep 2018 7:14 AM GMT)

தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி பலூன் போல உடைந்துவிடும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

போலியான, மோசடி வார்த்தைகளைக் கொண்ட 'திருட்டு லேப்டாப்' போன்றவர் ராகுல் காந்தி என்று மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நக்வி இது பற்றி கூறுகையில், ''காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலியான மற்றும் மோசடி வார்த்தைகளைக் கொண்ட திருட்டு லேப்டாப் போன்றவர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாஜக கூட்டணி 2019 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இமாலய வெற்றி பெறும். இதைக் கண்டு விரக்தி அடைந்துள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருப்பது போலக் காட்டி வருகின்றன.

ஆனால் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி பலூன் போல உடைந்துவிடும். பிரதமரின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல இந்தியாவின் பெருமையும் கடந்த நான்கரை வருடங்களில் உயர்ந்திருக்கிறது. தானியங்கள் மற்றும் எண்ணெயின் விலை கட்டுக்குள் உள்ளது. பருப்புகள், னியங்கள் மற்றும் வெங்காயம் ஆகியவை தட்டுப்பாடு இன்றிக் கிடைக்கிறது.விவசாயிகளுக்கு உரங்களும் டீசலும் எளிதில் கிடைக்கின்றன” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story