தேவேகவுடா குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் ஆவணங்களை பாரதீய ஜனதா வெளியிடுகிறது


தேவேகவுடா குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் ஆவணங்களை பாரதீய ஜனதா வெளியிடுகிறது
x
தினத்தந்தி 20 Sep 2018 10:17 AM GMT (Updated: 20 Sep 2018 10:17 AM GMT)

4 மணிக்கு நிருபர்கள் கூட்டத்தில் தேவேகவுடா குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் ஆவணங்கள் வெளியிடப்படும் என எடியூரப்பா கூறி உள்ளார். #DeveGowda #Yeddyurappa

பெங்களூர்

கர்நாடகாவில் நடந்து வரும் அரசியல் நாடகத்தில்  ஒரு புதிய திருப்பமாக  மாநில பா.ஜ.க தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பி.எச். எடியூரப்பாவுடன் இன்று  எச்.டி. தேவேகவுடா குடும்பத்துடன் தொடர்புடைய ஊழல் ஆவணங்கள் வெளியிடப்படும் என அவர் கூறி உள்ளார்

முதல்வர் எச் டி குமாரசாமி பாஜக குறித்து கடுமையான விமர்சனம் வைத்த அடுத்த நிமிடம் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான பி. எச். எடியூரப்பா இன்று மாலை 4 மணிக்கு பத்திரிகை நிருபர்களை சந்திக்க  போவதாகவும் தேவேகவுடா குடும்பத்தினரால்  கைப்பற்றப்பட்ட நிலம் தொடர்பான் ஆவனங்களை வெளியிடப்போவதாகவும் கூறி உள்ளார்.

முன்னதாக முதல்வர் குமாரசாமி  "வெட்கமின்றி கூட்டணி அரசை வீழ்த்துவதற்கான ஒரே நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

Next Story