மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்


மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கிறார்கள்
x

பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம் எழுதிய பின்னர் இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் நியூயார்க்கில் சந்திக்கவுள்ளனர்.

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருநாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் ஐ.நா.சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது பேசுவார்கள் என தகவல்கள் வெளியாகியது. பயங்கரவாத செயல்பாடுகள் காரணமாக இருநாட்டு பேச்சுவார்த்தையும் முடங்கியது. இப்போது இம்ரான் கான் கடிதம் எழுதிய பின்னர், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்திக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஷ்மா சுவராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியும் நியூயார்க்கில் சந்தித்து பேசுகிறார்கள் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கோரிக்கையை அடுத்து இருநாட்டு மந்திரிகள் சந்திப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக இனிதான் முடிவு செய்யப்படும், சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரலும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story