தேசிய செய்திகள்

‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு + "||" + '' The guard is a thief '' Rahul Gandhi's attack on Modi

‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு

‘‘காவலாளி ஒரு திருடன்’’ பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி தாக்கு
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:–

ஜெய்ப்பூர்,

பிரதமர் மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை, நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு ‘ரபேல்’ விமான பேரத்தில் இந்த அரசு ஊழலில் ஈடுபட்டுள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி வங்கிப்பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையாவை தப்ப விட்டுள்ளது.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை என்ற பெயரில், மோடி சாதாரண மக்களை வங்கி முன்பு வரிசையில் நிற்க வைத்தார். 15 தொழில் அதிபர்களின் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தார். அவரால் விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாதா?

இவ்வாறு அவர் பேசினார்.தொடர்புடைய செய்திகள்

1. 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் - ராகுல்காந்தி
2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
2. உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு - பிரதமர் நரேந்திர மோடி
உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
3. “எங்களிடம் மோடி உள்ளார், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?” எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கேள்வி
“எங்களிடம் மோடி உள்ளார், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?” என்று எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கேள்வியை எழுப்பியுள்ளது.
4. பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் அலுவலக பி.ஆர்.ஓ. மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது - ராகுல் காந்தி
திமுக உடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.